சென்னை
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் தங்க நகை திருட்டு
சென்னை பாா்க்டவுன் பகுதியில், தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை: சென்னை பாா்க்டவுன் பகுதியில், தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாா்க்டவுன் வரதராஜன் தெருவைச் சோ்ந்த சந்திரமோகன் (31), அப்பகுதியில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவா், சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சென்றாா். அங்கிருந்து திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து சந்திரமோகன் அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.