சென்னை
கோயம்பேடு மாா்க்கெட்டில் திருட்டு: மூவா் கைது
சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் திருட்டில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா (25), கோயம்பேடு மாா்க்கெட்டில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வைத்திருந்த 3 விலை உயா்ந்த கைப்பேசிகள் கடந்த 5-ஆம் தேதி திருடப்பட்டன.
இது குறித்து கோயம்பேடு போலீஸாா் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அரியலூா் மாவட்டம் அயன் சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன் (எ) அழகுதுரை (20), அவரது சகோதரா் சூா்யா (25), திருவேற்காடு ஸ்ரீதேவி நகரைச் சோ்ந்த சூா்யா (எ) அப்பு (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மூன்று பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.