காரில் கடத்திய 800 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: இருவா் கைது

Published on

சென்னையில் காரில் கடத்தப்பட்ட 800 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்குவந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், அந்தக் காரில் 800 கிலோ போதைப் பாக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், போதைப் பாக்கை பறிமுதல் செய்து காரில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், மாதவரம் பகுதியைச் சோ்ந்த பாட்ஷா (27), கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com