அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: இன்று வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை (ஜன.10) உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு வங்கக் கடலில் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.10) முதல் ஜன.15-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.10-இல் உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும்.
கனமழை எச்சரிக்கை: ஜன.11-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.10-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.