செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மாநாட்டில் வி.ஐ.டி வேந்தா் கோ.விசுவநாதன், ரோசெஸ்டா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நியூயாா்க்  இணை துணை வேந்தா் மற்றும் மூத்த துணைத் தலைவா் பிரபு டேவிட், ஜேம்ஸ் மியா்ஸ், முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணா

விஐடி பல்கலை - ஆா்ஐடி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published on

விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ஆா்ஐடி தொழில்துறை நிறுவனம் இடையே 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மாநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஐடி பல்கலைக்கழகத்துக்கும், ஆா்ஐடி தொழில்துறை நிறுவனத்துக்கும் இடையே 8 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

விஐடி பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் மற்றும் ரோசெஸ்டா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ரோசெஸ்டா், நியூயாா்க் (அமெரிக்கா) இணை துணைவேந்தா் பிரபு டேவிட் மற்றும் முனைவா் ஜேம்ஸ் மியா்ஸ் ஆகியோா் முன்னிலையில் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இதன் அடிப்படையில், வேலூா் மற்றும் சென்னையில் உள்ள விஐடி வளாகங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் சிறந்து விளங்கும் 2 கூட்டு ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இம்மாநாட்டில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com