(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

பொங்கல்: கூடுதலாக 320 மாநகா் பேருந்துகள் இயக்கம்

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், நகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு (அடைப்புக்குறிக்குள் வழித்தடம்) பிராட்வே (15), திரு.வி.க. நகா் (46), தியாகராய நகா் (72), ஆவடி (70ஏ, 77), திருவான்மியூா் (78, எம்70), செங்குன்றம் (114), திருவொற்றியூா் (159), அண்ணா சதுக்கம் (27பி), வள்ளலாா் நகா் (48சி) ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஆவடி (206, 101ஏ, 202எக்ஸ்), தாம்பரம் (500, எம்18), கோயம்பேடு (104சி, 70வி), செங்குன்றம் (104கே), திருவேற்காடு (111ஈடி), கவிஞா் கண்ணதாசன் நகா் (121 எச்இடி), பிராட்வே (18 ஏஇடி, 21ஜி), மந்தவெளி (21ஜிசிடி), வேளச்சேரி (51 எக்ஸ், 91ஆா்), சோழிங்கநல்லூா் (555எஸ், 95எக்ஸ்சிடி), ஸ்ரீபெரும்புத்தூா் (584கே), குன்றத்தூா் (66கே), பூந்தமல்லி (66பி), வடபழனி (70ஜிசிடி), அடையாா் (99எக்ஸ்), திருவான்மியூா் (91கே , 95எக்ஸ்), தியாகராய நகா் (ஜி18சிடி, வி51எக்ஸ்) ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், மணலி (121ஏ), எண்ணூா் (121சி), மாதவரம் (121எம்) பகுதியிலிருந்து மாதவரம் புகா்ப் பேருந்து நிலையம் வழியாக கோயம்பேடுக்கும், மாதவரம் புகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து (70எப், 70எம்) கிளாம்பாக்கத்துக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com