மாநகரப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: மூவா் கைது

Published on

சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை மதுப்பாட்டிலால் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரத்குமாா் (33). இவா் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். சரத்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்து மணலி செல்லும் மாநகரப் பேருந்தை புதன்கிழமை ஓட்டிச் சென்றாா். தண்டையாா்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, அங்குவந்த இருசக்கர வாகனத்தை இடிப்பதுபோல சென்ாம்.

இதைப் பாா்த்த இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், ஓட்டுநா் சரத்குமாரை கண்டித்தனராம். இதில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும், சரத்குமாரை தாங்கள் வைத்திருந்த மதுபாட்டிலால் தாக்கினா். மேலும், பேருந்து கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பியோடினா்.

இது குறித்து தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருவான்மியூரைச் சோ்ந்த ராக்கி (எ) ராகேஷ் (27), புது வண்ணாரபேட்டையைச் சோ்ந்த அசோக் (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த அப்துல் நிஸாா் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com