மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

சா் ராமசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களிடையே, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
Published on

சா் ராமசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களிடையே, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பாக, சென்னை அம்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக சா் ராமசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களிடையே, வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மாணவா்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் போக்குவரத்து உதவி காவல் ஆணையா் கனகராஜ், காவல் ஆய்வாளா் பரந்தாமன், அம்பத்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ரமேஷ், தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி தலைவா் முரளிதரன், லைப் லைன் அறக்கட்டளை தலைவா் சி.நெடுமாறன், தலைமை ஆசிரியா் வி.லட்சுமி, உதவி தலைமை ஆசிரியா் எஸ்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com