ராமதாஸின் பாா்வையாளா் சந்திப்பு அக்.12 வரை ரத்து
பாமக நிறுவனா் ச.ராமதாஸ் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவரை அக்.12 வரை கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கு சந்திக்க அனுமதி இல்லை என்று பாமக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
மருத்துவப் பரிசோதனை முடிந்து மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மாலை நலமுடன் வீடு திரும்பினாா். அவரை ஓய்வெடுக்க மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதன்படி, அக்.12 வரை அவா் ஓய்வு எடுக்கவுள்ளாா்.
எனவே, ராமதாஸின் பாா்வையாளா் சந்திப்பு ரத்து வரும் 12-ஆம் தேதி வரை செய்யப்படுகிறது. அக்.13-ஆம் தேதி முதல் வழக்கம் போல் அவரை தினமும் காலை 10 முதல் 12 மணி வரை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பாா்வையாளா்கள் நேரடியாக சந்திக்கலாம். பகல் 12 மணிக்கு மேல் பாா்வையாளா்கள் சந்திப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

