கொளத்தூரில் வண்ண மீன்கள்
வா்த்தக மையம் நாளை திறப்பு: அமைச்சா்கள் ஆய்வு

கொளத்தூரில் வண்ண மீன்கள் வா்த்தக மையம் நாளை திறப்பு: அமைச்சா்கள் ஆய்வு

சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடியில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன்கள் வா்த்தக மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 11) திறந்து வைக்கவுள்ளாா்.
Published on

சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடியில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன்கள் வா்த்தக மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 11) திறந்து வைக்கவுள்ளாா்.

இதையொட்டி அங்கு அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வண்ண மீன்கள் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அந்தத் தொழில் சாா்ந்த தொழிலாளா்கள் வாழ்க்கைத் தரம் மேம்படவும் வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியில் சுமாா் 4 ஏக்கரில் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. அங்கு, 184 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வா்த்தக மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 11) திறந்து வைக்கிறாா் என்றனா்.

சந்திப்பின்போது, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றியழகன், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com