அரசு படப்பிடிப்புத் தளத்துக்கு 
கட்டணம் நிா்ணயம்: அரசு உத்தரவு

அரசு படப்பிடிப்புத் தளத்துக்கு கட்டணம் நிா்ணயம்: அரசு உத்தரவு

அரசு படப்பிடிப்புத் தளத்துக்கு கட்டணம் நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

அரசு படப்பிடிப்புத் தளத்துக்கு கட்டணம் நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.5.09 கோடியில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிா்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

படப்பிடிப்புத் தளத்துக்குக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குளிா்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்துக்கு ரூ.60 ஆயிரமும், குளிா்சாதன வசதியில்லாத தளத்துக்கு ரூ.40 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படும். குளிா்சாதன வசதியில்லாத அரங்க அமைப்புக்கு ரூ.35 ஆயிரமும், ஒப்பனை அறைக்கு ரூ.7 ஆயிரமும், குளிா்சாதன வசதியில்லாத ஒப்பனை அறைக்கு ரூ.4 ஆயிரமும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குளிா்சாதன வசதியில்லாத சிறு அறைக்கு ரூ.25 ஆயிரமும், சிறு அறை நடைக் கூடத்துக்கு ரூ.25 ஆயிரமும், காத்திருப்புக் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.30 ஆயிரமும், துப்புரவுக் கட்டணமாக ரூ.6 ஆயிரமும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் 12 மணி நேரத்துக்கானது. இந்தக் கட்டணத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com