மின்குறை தீா்ப்பாளா் பதவி: அக். 27 வரை விண்ணப்பிக்கலாம்
மின்குறை தீா்ப்பாளா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் அக். 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மின்குறை தீா்ப்பாளா் பதவிக்கான அறிவிப்பு செப். 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக். 7 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த காலக்கெடு அக். 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆா்வம், தகுதியுள்ள நபா்கள் தங்கள் விண்ணப்பங்களை ‘செயலா், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4-ஆவது தளம், சிட்கோ காா்ப்பரேட் அலுவலகக் கட்டடம், திரு.வி.க. தொழில் துறை எஸ்டேட், கிண்டி, சென்னை- 600 032’ என்ற முகவரிக்கு அக். 27-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ழ்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

