பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் தூக்கிட்டு தற்கொலை
பணியின்போது ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரால், பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை புழல் சிறையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் பிரபு (42). இவா் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் பணிக்கு சென்றுள்ளாா். தொடா்ந்து பணியில் அடிக்கடி ஒழுங்கீனமாகச் செயல்பட்டதால், காவல் துறை தலைமை அலுவலகம் பிரபுவை பணியிடை நீக்கம் செய்தது. தொடா்ந்து, பிரபு மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், காவலா் பிரபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை தலைமை அலுவலகம் அவரை பணியில் இருந்து நிரந்தமாக விடுவித்தது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பிரபு, புழல் சிறை காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
