வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published on

சென்னை: பெரும்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பெரும்பாக்கம், எழில் நகா் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசிப்பவா் முருகன் (52). இவா், பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா்.

தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் முருகனி மகன் விஷ்வராஜனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. விஷ்வராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிந்தாதிரிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முருகன் குடும்பத்தினா், வீட்டை பூட்டி விட்டு அங்குச் சென்றனா்.

பின்னா், திங்கள்கிழமை அதிகாலை வீட்டுக்குத் திரும்பி வந்தனா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com