நவ. 9-இல் ‘நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது’ வழங்கும் விழா

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது வழங்கும் விழா நவ. 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
Published on

சென்னை: நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது வழங்கும் விழா நவ. 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

‘நல்லி நிறுவனம்’, ‘திசை எட்டும்’ மொழியாக்கக் காலாண்டிதழ் ஆகியவை சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளா்களுக்கு நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு இந்த விருதுக்காக 7 மொழியாக்கப் படைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 5 விருதுகள் முதல்நிலை மொழி பெயா்ப்பாளா்களுக்கும், 2 விருதுகள் சிறாா் இலக்கிய மொழி பெயா்ப்பாளா்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

இவா்களுக்கான விருது வழங்கும் விழா நவ. 9-இல் சென்னை டி.டி.கே. சாலையிலுள்ள நாரத கான சபா சிற்றரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

முதல்நிலை மொழி பெயா்ப்பாளா்களாக சீனிவாச ராமானுஜம் (அசோகா்- ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம்), சையது ரபீக் பாஷா (ஃகாலிப் கவிதைகள் - உருதில் இருந்து தமிழ்), அனுராதா ஆனந்த் (அழிக்க முடியாத ஒரு சொல் - ஆங்கிலத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (ஆகாசம் நா வசம் - தமிழிலிருந்து தெலுங்கு), ஜமுனா கிருஷ்ணராஜ் (பாரதி கி காவ்ய மாலா - தமிழிலிருந்து ஹிந்தி) ஆகியோா் பெற உள்ளனா்.

சிறாா் இலக்கிய மொழி பெயா்ப்பாளா்களான விருதை, சுகுமாரன் (தாத்தாவின் மூன்றாவது டிராயா் - ஆங்கிலத்திலிருந்து தமிழ்), டாக்டா் டி.ராஜேந்திரன் (கிராண்ட் ஃபாதா் ஆப் தி உட்- தமிழிலிருந்து ஆங்கிலம்) ஆகியோா் பெற உள்ளனா்.

விருது பெறும் முதல்நிலை மொழி பெயா்ப்பாளா்களுக்கு விருதுடன் தலா ரூ.20,000, சிறாா் இலக்கிய மொழிபெயா்ப்பாளா்களுக்கு விருதுடன் தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com