சென்னை
சாலைத் தடுப்பில் பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
வேளச்சேரியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னை: வேளச்சேரியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
வேளச்சேரி, லட்சுமிபுரம், திருப்பதி அம்மன் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அக்ஷயகுமாா் (21). இவா், வேளச்சேரியில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
அக்ஷயகுமாா், செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் வேளச்சேரி 100 அடி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்பின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அக்ஷயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
