கிண்டி மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை கிண்டி மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அக்.31-ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கிண்டி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவிகள் நேரடி சோ்க்கை, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் அக். 31 வரை நடைபெறுகிறது. எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரத் தகுதியுடைய மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிற்பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபட கருவிகள், ரூ.750 மாதாந்திர உதவித்தொகை, கட்டணமில்லா பேருந்து, ரயில் சலுகை பயண அட்டை, தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டதின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மகளிருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் தங்களது மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண், ஜாதி, வருமான சான்றிதள்கள், 5 புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி: 044 - 22510001, கைப்பேசி: 94990 55651 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
