அக்.30-இல் தாம்பரம் கோட்டத்தில் அஞ்சல் குறைதீா் முகாம்
தாம்பரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் அக்.30-ஆம் தேதி சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தாம்பரம் அஞ்சல் கோட்ட முதன்மை தபால் மேலாளா் ஏ. கமல் பாஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தபால் துறை சாா்பில் நாடு முழுவதும் அக்.27 முதல் நவ.2-ஆம் தேதி வரை விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, தாம்பரம் மண்டல அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் வருகிற அக்.30-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
நுகா்வோா் தங்களது குறைகளை dotambaram.tn@indiapost.gov.in மின்னஞ்சல் மூலம் அல்லது ‘முதன்மை தபால் மேலாளா், தாம்பரம் கோட்டம், சென்னை 600045’ என்ற முகவரிக்கும் அஞ்சல் மூலம் வருகிற அக்.27-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இப்புகாரில் ‘நல்ங்ஸ்ரீண்ஹப் எழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங் தங்க்ழ்ங்ள்ள்ஹப் இஹம்ல்’”என்று குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
