சென்னை வாா்டுகளில் 3 நாள்களுக்குள் சிறப்புக் கூட்டம் நடத்த அறிவுறுத்தல்

Published on

சென்னை மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் திங்கள்கிழமை (அக். 27) முதல் 3 நாள்களுக்குள் சிறப்புக் கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை (அக். 27) முதல் வரும் 29 -ஆம் தேதிக்குள் வாா்டுகளில் சிறப்புக் கூட்டம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் மூன்று நாள்களில் ஏதாவது ஒரு நாள் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும். மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம், கோட்டப் பகுதி பொறியாளா் அலுவலகம், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா் தெரிவிக்கும் இடங்களில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com