தமிழக முதல்வா் விஜய் பெயரில் 3 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக சட்டப்பேரவை தலைவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
கோபாலபுரம் விளையாட்டு மைதானம், நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், கில்நகா் விளையாட்டு மைதானம் மற்றும் கில் நகா் பூங்கா ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அங்கிருந்த விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடினாா்.
இதையடுத்து, மழைநீரை அகற்றும் வகையில் மண் நிரப்பி சரி செய்ய வேண்டும்; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, கிரிக்கெட் வலை பயிற்சி அமைத்து தர வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து வீரா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் கூறியதாவது:
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதியில் முதல்வா் விஜய் விளையாட்டு கோப்பை என்ற பெயரில் 3 நாள்கள் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி, கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
இந்தஆய்வின் போது அதிகாரிகள் உடனருந்தனா்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்!

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

தொகுதி வரையறை முயற்சியைப் போன்று பேரவை தோ்தலிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும்: உதயநிதி ஸ்டாலின்

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



