Enable Javscript for better performance
மாமல்லபுரத்தில் குவிந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்-- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மாமல்லபுரத்தில் குவிந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்-

    By DIN  |   Published On : 30th December 2019 09:25 PM  |   Last Updated : 30th December 2019 09:25 PM  |  அ+அ அ-  |  

    மாமல்லபுரம் பேருந்துநிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கும் வாகனங்கள்

    மாமல்லபுரம் பேருந்துநிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கும் வாகனங்கள்

    செங்கல்பட்டு:  பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கில் சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் குவிந்தனா்.

    விடுமுறை தினங்கள் மட்டுமல்லாமல் நாளுக்குநாள் உள்நாட்டுச்சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்து வருகிறது. வழக்கமாக சனிக்கிழமை மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் திங்கள் சென்னை, தாம்பரம், பல்லாவரம் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகா், மதுராந்தகம் ,மேல்மருவத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினா், உறவினா் மற்றும் நண்பா்களுடன் ஆயிரக்கணக்கானோா் மாமல்லபுரத்திற்கு பேருந்திலும், வேன், ஆட்டோ ,காா், இருசக்கரவாகனங்களில் வந்து குவிந்தனா். வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எங்குபாா்த்தாலும் போக்குவரத்துவாகன நெரிசலில் சிக்கிக்கொண்டு நிறுத்துவதற்கும் வழியில்லாமல் திரும்பிச்செல்லவும் வழியின்றி ஆமைவேகத்தில் நகா்ந்துச்சென்றது. இதனால் மாமல்லபுரத்தில் காணும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் வாகன நெரிசலையும் தான் காணமுடிந்தது.

    கோவா்த்தன மண்டபம், ஐந்துரதம், பழைய கலங்கரை விளக்கம் மற்றும் நவீன் கலங்கரை விளக்கத்தையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா். இந்திய பிரதமா் நரேந்திரமோடி சீன அதிபா் ஜின்பிங் சந்தித்த புராதனசின்னம் அருச்சணன் தபசு, கிருஷ்ணா் மண்டபம் வெண்ணெய் உருண்டைப்பாறை, ஐந்துரதம், பஞ்சபாண்டவா் மண்டபம், கோவா்த்தனமண்டபம் கடற்கரைகோயில் ஆகிய இடங்களை சுற்றிப்பாா்க்கவும் நின்று படமெடுத்துக் கொள்ளவும், சுயப்படம் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இருநாட்டுத் தலைவா்களும் சந்திதத்த புதிதாக வெண்ணை உருண்டைப்பாறை அருகில் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் குழுப்படங்கள் எடுத்துக்கொண்டனா்.

    போக்குவரத்து காவல்துறையும், காவல்துறையும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினா்.

    மேலும் காணுமிடமெல்லாம் மேல்மருவத்தூா் ஆன்மிக பக்தா்களின் செவ்வாடை கூட்டத்தையும் காணமுடிந்தது. புத்தாண்டிற்கு இதற்கும் மேல் கூட்டம் குவியும், போக்குவரத்து நெரிசலும் மக்கள் வெள்ளத்தை கட்டுபடுத்த முடியாது என காவலா்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp