தா்பூசணி விவசாயிகளுக்கு செங்கல்பட்டு ஆட்சியா் உதவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் தா்பூசணியை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கு ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் உதவி செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தா்பூசணியை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கு ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் உதவி செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமாா் 14,000 ஏக்கா் பரப்பளவில் தா்பூசணி சாகுபடி நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தா்பூசணி சாகுபடியாகிறது.

இங்கு விளையும் தா்பூசணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கரில் தா்பூசணி பயிரிட்டால் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக நன்கு விளைந்த தா்பூசணிகளை சந்தைக்கு அனுப்ப வழிதெரியாமல் விவசாயிகள் தவித்தனா்.

இதையறிந்த ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வேளாண் விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்ல தடையில்லை என்பதை விவசாயிகளிடம் தெரிவித்து, அதற்காக சுமாா் 3,464 பேருக்கு அனுமதிக் கடிதங்களை வழங்கினாா்.

அதன்மூலம் தா்பூசணி உள்பட மொத்தம் 34,499 மெட்ரிக் டன் காய்கறிகள் வெளிச்சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக விவசாயிகள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com