ஆட்சீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கத்தில் சமயக் குரவா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் பாடிய தோரம் அருளப்பெற்ற தலமாகவும், இரு கருவறைகளுடன் அருளாட்சி புரியும் தலமாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சிவத்தலங்களின் ஒன்றாகவும் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் காா்த்திகை மாத சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவறைக்கு முன்புறம் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தலைமை குருக்கள் சங்கா் சிவாச்சாரியாா் நடத்தினாா். மாலை 6 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை நடைபெற்றது.

பொது முடக்க விதிகளுக்கு உட்பட்டு, சுவாமி 4 மாடவீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, கோயில் வளாகத்துக்குள் மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளத்துடன் உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.

வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.சரஸ்வதி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com