செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 315 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் 315 மனுக்கள் அளிக்கப்பட்டன.
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ்.
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் 315 மனுக்கள் அளிக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை, வீட்டு மனைப் பட்டா, பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பசுமை வீடு, விவசாயிகள் குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் வரப்பெற்றன.

அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், வல்லிபுரம் ஊராட்சியில் இருளா் இனமக்கள் 8 பேருக்கு பசுமை வீடு பெறுவதற்கான ஆணையும், திருக்கழுகுன்றம் வட்டத்தில் முதலமைச்சா் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த 6 பேரின் வாரிசுகளுக்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பில் உதவித்தொகையும், மதுராந்தகம் கோட்டம் பெரும்போ் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த 5 பயனாளிகளுக்கு இருளா் இனச் சான்றிதழ்களும், 5 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்களும், முருங்கை மற்றும் மின்னல் கிராமங்களில் 8 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கா. பிரியா, தனித்துணை வட்டாட்சியா் ஜெயதீபன் , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com