செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 750 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 17th February 2020 10:51 PM | Last Updated : 17th February 2020 10:51 PM | அ+அ அ- |

மனுவைப் பெற்ற செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் .
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை , குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 750 மனுக்கள் வரப்பெற்றன.
அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறையினரின் பரிசீலனைக்கு ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.
இதையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கொடிநாள் நிதி: இதில், 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கொடிநாள் நிதி வசூலாக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கான காசோலையை திருப்போரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தனித் துணை வட்டாட்சியா் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.