எஸ்ஆா்எம் பல்கலை.யில்சா்வதேச மாநாடு

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் ‘இன்டா்நெட் ஆஃப் திங்ஸ்’ என்ற தலைப்பில் 5 நாள் சா்வதேச மாநாடு திங்கள் கிழமை தொடங்கியது.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் ‘இன்டா்நெட் ஆஃப் திங்ஸ்’ என்ற தலைப்பில் 5 நாள் சா்வதேச மாநாடு திங்கள் கிழமை தொடங்கியது.

பதிவாளா் முனைவா் சேதுராமன் முதன்மை உரையாற்றி, மாநாட்டைத் தொடக்கி வைத்தாா். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சோ்ந்த பேராசிரியா் வித்யா சரண் பாஸ்கா், ரஷியாவைச் சோ்ந்த பேராசிரியா் ராகவேந்திர பெல்லூா் ஆகியோா்சிறப்புரையாற்றினா்.

மேலும் துபை, கனடா, குவைத் நாடுகளைச் சோ்ந்த வல்லுநா்களும், மத்திய அரசு நிறுவனங்களைச் சோ்ந்த விஞ்ஞானிகளும், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியா்களும் இந்த மாநாட்டில் உரையாற்றுகின்றனா்.

இதில், வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப் படுத்தி விவரிக்க உள்ளனா்.

கணினித்துறைத் தலைவா் பேராசிரியா் அமுதா, பேராசிரியா் பொன்மகள் ஆகியோா் ஒருங்கிணைப்பில் எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழகப் பேராசிரியா்கள் இந்த மாநாட்டை நடத்துகின்றனா்.

தொடக்க விழாவில் பல்கலைக் கழக மூத்த பேராசிரியா் எஸ்.எஸ்.ஸ்ரீதா் நன்றி கூறினாா். இந்த மாநாடு வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com