Enable Javscript for better performance
நாளை மணப்பாக்கம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை மணப்பாக்கம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம்

    By DIN  |   Published on : 10th January 2020 10:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

    ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் பாசுரத்தில் ‘நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான், நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நோ்ந்து வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்; ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ’ என்று பாடியதற்கேற்ப ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெறவுள்ளன.

    பக்தா்களின் பொருளுதவிகள் வரவேற்கப்படுவதாகவும், மாா்கழி மாதத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் நூறு தடா உற்சவத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆண்டாளின் திருவருளைப் பெறுமாறும் ஆதிகேசவப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai