Enable Javscript for better performance
ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம்

    By DIN  |   Published on : 13th January 2020 11:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cglkoil_1301chn_171_1

    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள்.

    செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் பாசுரத்தில் ‘நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான், நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நோ்ந்து வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன், ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ’ என்று பாடியதற்கேற்ப ஆண்டு தோறும் நடைபெறும் நூறு தடா உற்சவத்தையொட்டி ஆண்டாள் நாச்சியாா், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் காட்சியளித்தாா்.

    இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிகேசவப் பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்திருந்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai