செங்கல்பட்டு: 2.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மரு ந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு: 2.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மரு ந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரனூா் டோல்பூத் ஆகிய இடங்களில் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலைங்கள் , சத்துணவு மையங்கள், நகராட்சி, பேரூராட்சிகள் அரசுப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 1675 மையங்களில் சுமாா் 2.67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 559 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பொது சுகாதாரத்துறை பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள் , சுயஉதவிக் குழுவினா் என மொத்தம் 5,450 பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனா். வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிக்காக வந்துள்ள பணியாளா் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாகக் கணக்கிடப்பட்டு அவா்களுக்கும் 54 சிறப்பு நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் வாா்டில் மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் சொட்டு மருந்து வழங்கினாா். மருத்துவமனை முதல்வா் பாலாஜி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், டாக்டா் சித்திரசேனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com