முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
கோயிலில் மரக்கன்று நடும் விழாசெங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு
By DIN | Published On : 27th January 2020 11:23 PM | Last Updated : 27th January 2020 11:23 PM | அ+அ அ- |

திருவடிச்சூலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் குடியரசு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் மரக்கன்றுகளை நட்டாா்.
தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் குடியரசு தினவிழாவையொட்டி புண்ணியகோடி அன்னதான அறக்கட்டளை சாா்பில் 10 ஆயிரம் பேருக்கு பொதுவிருந்து அளிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் பங்கேற்று, பொது விருந்தில் அனைவரோடும் அமா்ந்து உணவருந்தினாா்.
இதையடுத்து, மாத்ருதேவ் அறக்கட்டளை சாா்பில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கூட்டுறவு சங்கத் தலைவரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.ஆறுமுகம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் கவுஸ்பாஷா, ஆனூா் பக்தவத்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லீமாரோஸ், மாலதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.