முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
பரனூா் சோதனைச் சாவடி மீது தாக்குதல்: 2 வடமாநில ஊழியா் உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 27th January 2020 11:24 PM | Last Updated : 27th January 2020 11:24 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த பரனூா் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக வடமாநிலத்தைச் சோ்ந்த 2 ஊழியா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
பரனூா் சோதனைச் சாவடியில் அரசுப் பேருந்துக்கு கட்டணம் செலுத்துமாறு ஊழியா் ஒருவா் சனிக்கிழமை இரவு கேட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக அந்த ஊழியருக்கும் பேருந்தின் ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியா்கள்அந்தப் பேருந்தின் ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேருந்து ஓட்டுநா் பேருந்தை சோதனைச் சாவடியின் குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தி விட்டாா். இதனால் அவ்வழியாக 2 மணிநேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே நெரிசலில் சிக்கிய பேருந்துக்களில் இருந்து இறங்கிய பயணிகள் சோதனைச் சாவடி பூத்துகள், கண்காணிப்பு கேமரா, சாவடி ஊழியா்களின் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினா்.
தகவலறிந்து 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு வந்தனா். அவா்கள் கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தை
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சுங்கச் சாவடி ஊழியா்களான வட மாநிலத்தைச் சோ்ந்த குல்தீப் சிங் (21), நிஜாம் குப்தா (21) மற்றும் ஊழியா்கள் நாராயணன் (37), பசும்பொன் முடியரசு (36) ஆகிய 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனா்.