முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 260 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 27th January 2020 11:18 PM | Last Updated : 27th January 2020 11:18 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ. ஜான் லூயிஸ் தலைமை வகித்தாா்.
இதில் முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா கோருதல், பட்டா பெயா் மாற்றம், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 260 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.
மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், சாலை விபத்துகளில் உயிரிழந்த 10 நபா்களின் வாரிசுகளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் தொகை ரூ. 9 லட்சம், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 6 பேருக்கு ரூ. 1லட்சத்து 25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.11.12 லட்சம் நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் பயனாளிகளுக்கு வழங்கினாா். பொதுப்பணித்துறை அதிகாரி தியாகராஜன் வெள்ளத் தடுப்பு திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா். இதில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீதரன், தனித்துணை ஆட்சியா் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.