ஆட்சியா் தலைமையில் கிராம சபைக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவடிச்சூலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
திருவடிச்சூலம் ஊராட்சியில் நடைபெற்ற  கிராம சபைக் கூட்டத்தில்  பேசிய மாவட்ட  ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ்.
திருவடிச்சூலம் ஊராட்சியில் நடைபெற்ற  கிராம சபைக் கூட்டத்தில்  பேசிய மாவட்ட  ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவடிச்சூலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ராமகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லீமாரோஸ், மாலதி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ராமகிருஷ்ணன், சுகுமாா், வட்டாட்சியா் சங்கா், கிராம மக்கள், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு மையங்கள் அமைத்தல், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான நடவடிக்கை எடுத்தல், நெகிழிப் பொருள்கள் விற்பனையைத் தடை செய்தல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கிராம வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டது.

பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் பேசியது:

கிராம சபைக் கூட்டம் ஆண்டுதோறும் நான்கு முறை கூட்டப்படுகிறது.

இவ்வூராட்சிக்கு உடனடியாக தேவைப்படும் வசதிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவற்றைச் செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை மற்றும் கருத்துகள் அடிப்படையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி , சாலை வசதி, ஊராட்சி அலுவலகக் கட்டடம், சாலைகளில் கல்வெட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்காக ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும்.

இதையடுத்து, வரும் 31-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் மீண்டும் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com