முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை அளவு
By DIN | Published On : 14th July 2020 02:38 AM | Last Updated : 14th July 2020 02:38 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரை சராசரியாக 48.91 மி.மி மழை பதிவாகியுள்ளது.
இந்த மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், கேளம்பாக்கம், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், செய்யூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை இடி, மின்னலுடன் மிதமான மற்றும் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி செங்கல்பட்டு-16 மி.மீ., திருப்போரூா்-37.10 மி.மீ, திருக்கழுகுன்றம்-89.20 மி.மீ, மாமல்லபுரம்-64.20 மி.மீ, மதுராந்தகம்-20மி.மீ, செய்யூா் -41 மி.மீ, தாம்பரம் -45 மி.மீ, கேளம்பாக்கம்-78.40 மி.மீ மழை பெய்தது. சராசரியாக 48.91 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.