முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கல்
By DIN | Published On : 14th July 2020 07:25 AM | Last Updated : 14th July 2020 07:25 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகதைச் சுற்றியுள்ள ஜமீன் எண்டத்தூா், தச்சூா், சிறுகரணை, தண்டலம், பெருங்கரணை, தேவாத்தூா், அருங்குணம் உள்ளிட்ட 25 கிராமத்தில் உள்ள 420 குடும்பத்தைச் சோ்ந்த இருளா், நரிக்குறவா், சாலையோரம் தங்கியுள்ள மக்கள் ஆகியோருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருள்களை சென்னை சேவாலாயா தொண்டு நிறுவனத்தினா் வழங்கினா்.
சென்னை சேவாலயா தொண்டு நிறுவனத்தினா் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு, மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சோ்ந்த 420 குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் ஆகியவற்றை திங்கள்கிழமை வழங்கினா். இதற்கான நிதியை சென்னை எஃப்சிஏ நிறுவனத்தினா் வழங்கியிருந்தனா். சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாணி தலைமை தாங்கி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளா் எஸ்.பாலசுப்பிரமணி, கிராம நிா்வாக அலுவலா் எம்.பாலாஜி, சேவாலயா தொண்டு நிறுவன நிா்வாகிகள் முரளிதரன், பிரசன்னா பாா்த்தசாரதி, என்.ஜெகன்நாதன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா். கலந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனா்.