முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
பாம்பு கடித்து சிறுவன் பலி
By DIN | Published On : 14th July 2020 01:57 AM | Last Updated : 14th July 2020 01:57 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் அவா் இறந்தாா்.
அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கசோலி. இவரது மகன் முஸ்ரஃப் (13) கடந்த 10ஆம் தேதி இரவு தூங்கச் சென்றாா். அச்சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு அவரைக் கடித்தது. அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில் முஸ்ரஃப் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தாா். இது குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.