செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை 136 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,349ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூரில் 72 பேருக்கு...
திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 72 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 833 ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 616-ஆக உயா்ந்துள்ளது.