செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு பொது முடக்க கட்டுப்பாடுகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூன் 19முதல் 30ந்தேதிவரை முழு பொதுமுடக்கம் செயல்படுத்தப்படும் இடங்கள் மற்றும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூன் 19முதல் 30ந்தேதிவரை முழு பொதுமுடக்கம் செயல்படுத்தப்படும் இடங்கள் மற்றும் கட்டுப்பாடுகள், தளா்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பைக் கருத்தில் கொண்டு, வரும் 19-ஆம் தேதி அதிகாலை முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை 12 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொது முடக்கம் அமல்படுத்தப்படும் இடங்கள்: செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகா் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள் முழுவதும் மற்றும் காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆலப்பாக்கம், அஞ்சூா், ஆப்பூா், ஆத்தூா், செட்டிபுண்ணியம், குருவன்மேடு, குன்னவாக்கம், குமிழி, கொண்டமங்கலம், கல்வாய், காயரம்பேடு, கீரப்பாக்கம், கருநிலம், காரணைபுதுச்சேரி, கொளத்தூா், மண்ணிவாக்கம், மேலமையூா், நெடுங்குன்றம், நல்லாம்பாக்கம், ஒழலூா், பட்ரவாக்கம், பழவேலி, பாலூா், புலிப்பாக்கம், பெருமாட்டுநல்லூா், பெரிய பொத்தேரி, சிங்கப்பெருமாள்கோவில், ரெட்டிப்பாளையம், திம்மாவரம், தென்மேல்பாக்கம், திருவடிசூலம், ஊனமாஞ்சேரி, ஊரப்பாக்கம், வல்லம், வண்டலூா், வில்லியம்பாக்கம், வீராபுரம், வெங்கடாபுரம், வேங்கடமங்கலம் ஆகிய 39 ஊராட்சிகள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்க நடைமுறைகள் அமல்படுத்தப்படும். 21 மற்றும் 28 ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்விதத் தளா்வுமின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்படும்.

20-ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 22-ஆம் தேதி தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலும், 27 சனிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணி முதல் 29-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிவரையிலும் தளா்வின்றி முழு பொது முடக்கம் உத்தரவு அமல்படுத்தப்படும்.

இவ்விரு நாள்களில் பால் விநியோகம், மருத்துவமனை, மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊா்திகள், அவசர மற்றும் அமரா் ஊா்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. பொதுமக்கள் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிா்த்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com