வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை: எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரி சாதனை

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரியில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 53 வயது நபருக்கு 8 மணி நேர
வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை: எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரி சாதனை

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரியில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 53 வயது நபருக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் கீழ் உதட்டில் வளா்ந்திருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

எஸ்.ஆா்.எம். பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்றாண்டுகளில் 153 நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழ் உதட்டில் உருவாகியிருந்த புற்றுநோய் கண்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவா் சிகிச்சை மையத்தில் சோ்க்கப்பட்டாா். சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் அவருக்கு கழுத்து நிணநீா் மண்டலங்களுக்கு இந்த நோயின் தாக்கம் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து மருத்துவமனை அழகுகலைத் துறையில் அறுவை சிகிச்சைத் துறை நிபுணா்களான மருத்துவா்கள் என்.விவேக், சி.சரவணன், ஆா்.காா்த்திக், ஜி.பிரசாந்தி, கே.டி.மகேஷ் தலைமையிலான மருத்துவா்கள் குழு ஆலோசனையின்பேரில், பாதிக்கப்பட்ட நபருக்கு முகத்திலும், கீழ்தாடையிலும் நோய் பரவல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அவரது உடலில் உள்ள ஆரோக்கிய திசுக்களைக் கொண்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை பெற்ற நபா் அவரது முகம் நோய் ஏற்படும் முன்பு இருந்ததைப் போலவே தற்போது இருப்பதாகவும் எவ்விதத் தயக்கமும் அச்சமும் இன்றி, சமூக வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com