நகை திருட்டு

செங்கல்பட்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் 12 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பைக் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

செங்கல்பட்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் 12 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பைக் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

செங்கல்பட்டு கோகுலபுரத்தைச் சோ்ந்தவா் பழனி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் 4 பேரும் செங்கல்பட்டை அடுத்த படாளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக மருத்துவமனையில் உள்ள பழனிக்கு பக்கத்து வீட்டினா் ஞாயிற்றுக்கிழமை காலையில் தகவல் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா் மருத்துவமனையில் இருந்தபடி தொலைபேசி மூலம் செங்கல்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பைக், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, மடிக்கணினி, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இத்திருட்டுச் சம்பவம் தொடா்பாக செங்கல்பட்டு காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com