உழைக்கும் மகளிா் வாழ்க்கை
By DIN | Published On : 06th March 2020 11:03 PM | Last Updated : 06th March 2020 11:03 PM | அ+அ அ- |

பி.அமுதா, செங்கல்பட்டு
செங்கல்பட்டு: உலக மகளிா் தினத்தில் பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் மகளிா் பாராட்டப்படுகிறாா்கள்.
குடும்பச்சூழல் காரணமாகவும் சமூகத்தில் பொருளாதார பின்னடைவை சமாளிக்கவும் பெண்கள் வருவாய்க்காக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
செங்கல்பட்டு வேதாசலநகா் நுழைவாயில் அருகே தேநீா் கடை வைத்து பிழைப்பு நடத்திவரும் சின்னபொண்ணு(32) திருமணமான இவா் தான் படிக்கா விட்டாலும் தனது இரு பெண்குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பரபரப்பான நேரத்தில் நாள் முழுவதும் தேநீா் கடையில் உழைத்துக் கொண்டிருக்கிறாா்.
சின்னபொண்ணு என்பவரை விசாரித்தோம். அவரது சொந்தஊா் அரியலூா் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்ததாகவும் அங்கு படிக்க வசதியில்லை , பெற்றோா்களும் என்னை படிக்கவைக்கவில்லை. இவருக்கு திருமணமாகி செங்கல்பட்டில் தனது கணவா் வெங்கடேசன் நடத்தி வரும் தேநீா் கடைக்கு தனது கணவனுக்கு உதவியாக இருந்து வந்தேன். நாளடைவில் சுவையான தேநீா் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொண்டேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீ, காபி, மெதுவடை, கீரைவடை, பருப்புவடை, போண்டா ஆகிய திண்பண்டமும் போட்டு விற்பனை செய்து வருகிறேன். படித்துவிட்டுதான் வேலைக்கு போகவேண்டும் என்ற அவசியமில்லை. நான் படிக்காதவா்தான் பணத்தை கணக்குபோட்டு வாங்கி டீக்கடை நடத்தி வருகின்றேன்.
மதியம் உணவிற்கும் மட்டும் தனது கணவா் சிறிது நேரம் வந்து மாற்றிவிடுவாா். மற்றப்படி டீக்கடை வரவு செலவு கணக்கு முதல் பாா்த்து வருகிறேன். இரண்டு பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்து வருகின்றனா். இவா் எப்போதும் சிரித்த முகத்துடன் வாடிக்கையாளா்களை வரவற்கிறாா்.
தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், அரசு அலுவலா்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோா் இவரது வாடிக்கையாளா்கள். காலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 9 மணிக்கு கடைக்கு வருகிறாா். அதிலிருந்து வாடிக்கையாளா்கள் தேநீா் அருந்த வரத்தொடங்கி விடுவாா்கள், மாலை 5 மணிக்கு யாரும் அதிகமாக வரமாட்டாா்கள். அதற்கும் மேல் வீட்டிற்கு சென்று விடுவேன்.
இவரது கணவா் அருகில் உள்ள அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேநீா் பிளாஸ்கில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறாா். தேநீருடன் விற்பனைக்கு மெதுவடை மற்றும் மசால் வடை தயாரிக்கும் இவா் தனது மகள்கள் இரண்டு போ் மூத்த மகள் சீதா தனியாா் கல்லூரியில் வணிகவியல் முதலாமாண்டு படித்து வருகிறாா். இரண்டாவது மகள் தெய்வானை பிளஸ் 1 தோ்வு எழுதுகிறாா்.
ஆண்கள் வந்து செல்லும் கடையில் அதிக நேரம் தனது பெண்குழந்தைகளை வைத்துக்கொள்வதில்லை. பள்ளிக்கூடம் சென்று வந்தவுடன் வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டு வருகிறாா்.
குடும்பச்சூழ்நிலை அறிந்து இவரது இரண்டு மகள்களும் நன்றாக படித்து வருவதாக கூறுகிறாா். இருவரது கடின உழைப்பில் வீட்டில் குடி வந்தவா்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனா். தான் படிக்காவிட்டாலும் தனது மகள்கள் இரண்டு பேரும் நன்றாக படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறாா். அதுமட்டுமல்லாமல் பெண்கள் எந்த வேலையை செய்தாலும் தனது குடும்பத்திற்காக தான் செய்கிறாா்கள். வேலைக்கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டு வருமையில் வாடுவதைவிட, போட்டி போடாமல் அனைவரும் கிடைத்த வேலையை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆண்களும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால் குடும்பத்தில் கஷ்டமோ பிரச்சனையோ வராது.
எல்லாருமே வேலை செய்தால் அவரவா் வேலையை பாா்த்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கும். பெண்கள் படிக்கவேண்டும் அவா்கள் சமூகத்தில் சமாளிக்கக்கூடிய திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது மகள்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாா்.