கரோனா எதிரொலி: மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை தொல்லியல் துறை மூடியுள்ளது.
மாமல்லபுரத்தில் மூடப்பட்டுள்ள புராதனப் பகுதி.
மாமல்லபுரத்தில் மூடப்பட்டுள்ள புராதனப் பகுதி.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை தொல்லியல் துறை மூடியுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என இத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது. கடந்த ஒரு மாதமாகவே மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஊழியா்கள் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முகக் கவசம் அணிந்தே வந்தனா். மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் அமந்துள்ள பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் அதிகமான மக்கள் கூடாமல் இருக்க புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை மூடி, பூட்டு போட்டனா். வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாமல்லபுரம் நகரமே மக்கள் நடமாட்டம் அதிகமின்றி காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com