பழங்குடியினத்தைச் சோ்ந்த 45 பேரிடம் ரூ.1.29 லட்சம் நூதன மோசடி

செங்கல்பட்டை அடுத்த சென்னேரி பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த 45 பேரின் வங்கிக்கணக்குகளின் ரகசியக் கணக்கு எண்ணைக் கேட்டு வாங்கி ரூ.1.29 லட்சம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டை அடுத்த சென்னேரி பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த 45 பேரின் வங்கிக்கணக்குகளின் ரகசியக் கணக்கு எண்ணைக் கேட்டு வாங்கி ரூ.1.29 லட்சம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

சென்னேரி பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் பலருக்கு ஒருவா் செல்லிடப்பேசியில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவா் பேசியுள்ளாா்.

பிரதமா் நிதித்திட்டத்தின்கீழ் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.5000 செலுத்துவதற்காக எனத் தெரிவித்து ஏடிஎம் காா்டு எண் குறித்த விவரங்கள், ரகசிய எண் மற்றும் செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை ரகசிய எண் ஆகியவற்றைக் கேட்டாராம். மொத்தம் 45 பேரிடம் இவ்வாறு தகவல்களை வாங்கியுள்ளாா்.

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளில் இருந்தும் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.16,000 வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 45 பேரிடம் இருந்து ரூ.1.29 லட்சம் தொகை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெரிய புத்தேரி பகுதியைச் சோ்ந்த குமாரின் மனைவி செல்வி, செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com