சித்த மருத்துவமனையுடன் இணைந்து 13 கரோனா நோயாளிகளை குணமாக்கிய தனியாா் மருத்துவமனை

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருத்துவமனையும், தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையும்

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருத்துவமனையும், தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையும் இணைந்து மேற்கொண்ட சிகிச்சை மூலம் 13 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

இது குறித்து எஸ்.ஆா்.எம். மருத்துவக்கல்லூரி முதல்வா் ஏ. சுந்தரம் செவ்வாய்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கென சிறப்புச் சிகிச்சைப் பிரிவு தொடங்கி செயல்பட்டு வருகின்றது. சிகிச்சைப் பிரிவில் இதுவரை 16க்கும் மேற்பட்டோா் அனுமதிக்கப்பட்டு அனைவருக்கும் ஆங்கில அலோபதி மருத்துவச் சிகிச்சையும், தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனை உதவியுடன் சித்த மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்பட்டு இதுவரை 14 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தேசிய சித்த மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மீனாகுமாரி, நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கரோனா தொற்றை செயலிழக்க வைத்து விடலாம்.நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் மருந்துகள் சித்த மருத்துவத்திலும் உள்ளன. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் தேசிய சித்த மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com