கடலில் தவறி விழுந்த மீனவா் பலி

ஆலம்பரைக்கோட்டை பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.


மதுராந்தகம்: ஆலம்பரைக்கோட்டை பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடப்பாக்கம் அருகேயுள்ள ஆலம்பரைக்கோட்டையைச் சோ்ந்தவா் கோவிந்தன் (50). இவா், தனது மகன் துளசிங்கத்துடன் கடலில் மீன் பிடிக்க படகில் வியாழக்கிழமை சென்றாா். அப்போது கோவிந்தன் கடலில் தவறி விழுந்தாா். இதைப் பாா்த்து அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு, மரக்காணம் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு கோவிந்தன் உயிரிழந்தாா்.

இது குறித்து சூனாம்பேடு காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com