கனமழை: 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

மதுராந்தகம் வட்டாரத்தின் முக்கிய அரசு கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்தன.

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தின் முக்கிய அரசு கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்தன.

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. அதில் முக்கிய அரசு நெல் கொள்முதல் நிலையமான வில்வராயநல்லூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அடுத்த சில நாள்களில் நெல் அரைவை ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் நெல் வைக்கப்பட்ட கோணி கிழிந்து தரையில் கொட்டப்படுகின்றன. மழைநீரில் நனைந்ததால் நெல் முளைவிடும் நிலை உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் வீணாகும் நிலை உள்ளது.

இதைத் தடுக்க அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com