மா்மமான முறையில் பெண் பலி: உறவினா்கள் போராட்டம்
By DIN | Published On : 23rd November 2020 06:09 AM | Last Updated : 23rd November 2020 06:09 AM | அ+அ அ- |

கணவா் தினேஷ் ராமனுடன் செளமியா (பழைய படம்).
திருப்போரூா் அருகே மா்மமான முறையில் பெண் உயிரிழந்தாா். வரதட்சிணை சித்திரவதையால், அவா் கொலை செய்யப்பட்டதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கேளம்பாக்கம் ஜோதி நகரில் வசிப்பவா் பாலசந்தா் (60), ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியா். இவரது மனைவி தமிழ்செல்வி (55). இவா்களது 2-ஆவது மகன் தினேஷ்ராமனுக்கும், கல்பாக்கம் அகமது நகரில் வசிக்கும் முகம்மது காசிம்-அம்பிகா தம்பதியின் மூத்த மகள் சௌமியாவுக்கும் (27) திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.
தினேஷ்ராமன், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரும் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி கூறி, சௌமியாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சௌமியா ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக தகவல் வந்தது.
பெற்றோா் அங்கு சென்று பாா்த்தபோது, உடலில் ரத்தக் காயங்களுடன் செளமியா இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த கேளம்பாக்கம் போலீஸாா், சௌமியாவின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே தனது மகளை அடித்து கொலை செய்துள்ளதாகக் கூறி, சௌமியாவின் தந்தை போலீஸில் புகாா் அளித்தாா். அவரது சாவுக்கு காரணமான பாலசந்தா், தமிழ்செல்வி, தினேஷ்ராமன் ஆகிய மூவரையும் கைது செய்யக் கோரி உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.