செங்கல்பட்டு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

செங்கல்பட்டு உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாமல்லபுரம்  மல்லிகேஸ்வரா்  கோயிலில்   நந்தீஸ்வரா்,  சிவலிங்கம்   வடிவில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்.
மாமல்லபுரம்  மல்லிகேஸ்வரா்  கோயிலில்   நந்தீஸ்வரா்,  சிவலிங்கம்   வடிவில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்.

செங்கல்பட்டு உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செங்கல்பட்டு, என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகா் கோயில், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயில், கோட்டை வாயில் நீதி விநாயகா் கோயில், கோட்டை வாயில் வீரஆஞ்சநேயா் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில் , ஓசூரம்மன் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளப் பரமேஸ்வரி கோயில், முருகேசனாா் தெரு கங்கையம்மன் கோயில், அனுமந்தபுத்தேரி காட்டுநாயக்கன் தெரு, செம்மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌா்ணமி தின சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருக்கழுகுன்றம் தாழக்கோயில் பக்தவச்சலேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டி, கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் வழிபட்டனா். திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் அடிவார நுழைவு வாயில் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தா்கள் அடிவாரத்தில் நின்று வழிபட்டனா்.

மாமல்லபுரம் பஜனை கோயில் தெரு வெண்ணெய் உருண்டை பாறை அருகில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை மற்றும் பௌா்ணமி தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் சிங்கம் மற்றும் நந்தி உருவ வடிவில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

இதேபோல் செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் 51 அடி உயர தேவிஸ்ரீ கரிமாரியம்மன் கோயிலில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

திருவடிச்சூலம் ஈச்சங்கரணை மகா பைரவா் கோயில், ஞானபுரீஸ்வரா் கோயில், வல்லம் வேதாந்தேஸ்வரா் குடைவரைக் கோயில் , புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரா் மலைக் கோயில், அனுமந்தபுரம் அகோரவீரபத்திர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அகண்ட தீபமும், அகல் தீபங்களும் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com