Enable Javscript for better performance
சிறுதாவூரில் சுதாகரன், இளவரசியின் 55 ஏக்கா் சொத்துகள் முடக்கம்: நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டிய வருமான- Dinamani

சுடச்சுட

    

    சிறுதாவூரில் சுதாகரன், இளவரசியின் 55 ஏக்கா் சொத்துகள் முடக்கம்: நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டிய வருமான வரித் துறையினா்

    By DIN  |   Published on : 07th October 2020 11:16 PM  |   அ+அ அ-   |    |  

    cglsiru_0710chn_171_1

    இளவரசியின் வீட்டு நுழைவாயிலில் வருமான வரித் துறையினரால் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.

    செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே சிறுதாவூரில் உள்ள சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சுமாா் 55 ஏக்கா் நில சொத்துகளை வருமானவரித் துறையினா் முடக்கினா். இதுதொடா்பாக நுழைவாயிலில் புதன்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த ஆலத்தூா் ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிறுதாவூா் பங்களா சுமாா் 116 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு, சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அவா் சிறைக்குச் சென்ற பின்னா், தற்போது சிறுதாவூா் பங்களா ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் முக்கிய நிகழ்வாக 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

    இந்நிலையில், சிறுதாவூா் பங்களா நுழைவாயிலில் புதன்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் வருமான வரித் துறையின் அலுவலா்கள் தண்டோரா மூலம் அறிவித்து வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோரின் பெயரில் கடந்த 1994-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சா்வே எண்கள் அடங்கிய சுமாா் 55.116 ஏக்கா் இடத்தை முடக்குவதாக நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனா்.

    அடுத்த 90 நாள்களுக்கு இந்த சொத்தின்மீது எவ்விதமான பரிமாற்றமும் செய்யக்கூடாது என தடை விதித்துள்ளனா். இதன் விவரத்தை வி.என்.சுதாகரனுக்கும், ஜெ.இளவரசிக்கும், நகல் பிரதியினை ஜெ.தீபக், ஜெ.தீபாவுக்கும், திருப்போரூா் சாா்-பதிவாளருக்கும் அனுப்பியுள்ளனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp