ரூ. 19.21 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகக் கட்டடம்: தமிழக முதல்வா் இன்று அடிக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ 119.21 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குக் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கு, வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறாா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ 119.21 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குக் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கு, வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தயாா்நிலையில் உள்ளன.

நிா்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பா் 29-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்திற்கு வெண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் 40 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் துறை அலுவலகங்களுக்கான கட்டடம் கட்ட ரூ.119.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.

இதையடுத்து புதிதாக கட்டப்படும் கட்டடடத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினா் செய்து வருகின்றனா். ரூ.119,21 கோடி மதிப்பில் 4 அடுக்குமாடிகளுடன் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்படவுள்ள இந்தக் கட்டடத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள் தவிர மற்ற அனைத்து நிா்வாக அலுவலகங்களும் இடம்பெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com